பேஸ்புக்கில் பதியும் சில பதிவுகளுக்கு தடை!

Share this News:

புதுடெல்லி (31 ஜன 2020): ஃபேஸ்புக்கில் வன்முறை பதிவுகள் பதிவதற்கு பேஸ்புக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது வியாழன் அன்று திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி மேலும் பரபரப்பு அடைந்தது. துப்பாக்கிதாரி ராம் பகத் கோபாலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ராம் பகத் கோபாலின் ஃபேஸ்புக் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கம் செய்துள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையில் ஈடுபடுவோருக்கு பேஸ்புக் இடமளிக்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை போற்றுதல், ஆதரிப்பது போன்ற கருத்துப் பதிவுகளும் நீக்கப்படும் எனவும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply