டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நீக்கம் – உத்திர பிரதேச அரசின் அராஜகம்!

Share this News:

லக்னோ (11 நவ 2021): உத்திர பிரதேச அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை காடவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசின் கையாலாகதத் தனத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு பல குழந்தைகளை காப்பாற்றினார்.

ஆனால் உபி அரசு இதுகுறித்த விசாரணையில் டாகர் கஃபீல் கான் மீது பழி சுமத்தி அவரை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கியது. மேலும் அவர் சிறையிலடைக்கப்பட்டு பல அடக்குமுறைகளை சந்தித்தார். தற்போது விடுதலையாகியுள்ளார் டாக்டர் கஃபீல்கான்.

அதேவேளை இடைநீக்கத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உபி அரசு கஃபீல்கானனை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் நீதிக்கான போராட்டம் தொடரும் என்று கூறிய கஃபீல் கான், தெரிவித்துள்ளார். டாகர் கபீல்கானுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply