டெல்லி வன்முறையில் உயிரிழந்த 30 பேர் யார்? என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

Share this News:

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த 38 பேர் யார் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முபாரக் அலி (35)
பெயிண்டிங் வேலை செய்பவர் இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் .

முஹம்மது இர்ஃபான் (42)
கூலி வேலை செய்பவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஷோக் திவாரி (24)
தொழிற்சாலையில் வேலை செய்பவர். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுலைமான் (22)
இவரது சகோதரர் இவரை கடந்த மூன்று தினங்களாக தேடி வந்த நிலையில் GTB மருத்துவமனையில் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

ராகுல் தாக்கூர் (23)
சிவில் சர்வீஸ் மாணவர்

அங்கிட் சர்மா (25)
உளவுத்துறை அதிகாரி

முஹம்மது ஷபான் (22)
இவர் சுடப்பட்டு இறந்தவர். இவரது குடும்பத்தினர் பலர் தீ வைத்து கொளுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சஞ்சீத் தாக்கூட் (32)
வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்பவர்.

ரத்தன் லால் (42)
தலைமை காவலர். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அக்பரி (85)
அவரது வீட்டில் தீ வைத்து கொளுத்தப்பட்டு இறந்தார்.

அன்வர் (58)
மனைவி மற்றும் 2 மகள் உள்ளனர்.

தினேஷ் குமார் (35)
டிரைவர். மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆமிர் (30), ஹாஷிம் (17)
இருவரும் சகோதரர்கள்.

முஷர்ரஃப் (35)
மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

விநோத் குமார் (50)
மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

விர்பான் (48)
மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஜாஹிர் (26)
வெல்டிங் பணி புரிபவர்.

இஸ்தியாக் கான் (24)
மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தீபக் குமார் (34)
மனைவி மற்றும் மகள் மகன் உள்ளனர்.

அஷ்பாக் ஹுசைன் (22)
மனைவி உள்ளார். சமீபத்தில் திருமணம் ஆனவர்.

பர்வேஸ் ஆலம் (50)
சுடப்பட்டு இறந்தவர்.

மெஹ்தாப் (21)
கட்டிட பணியாளர்.

முஹமம்து புர்கான் (32)
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராகுல் சோலங்கி (26)
சிவில் பொறியாளர்.

முதஸ்ஸிர் கான் (35)
ஆட்டோ ஓட்டுநர்.

ஷாஹித் அலவி (24)
சமீபத்தில் திருமணம் ஆனவர்.

அமான் (17)
மாணவர்.

மஹ்ரூஃப் அலி (30)
சொந்த தொழில் புரிபவர்.

முஹமம்து யூசுப் (52)
தச்சுத் தொழில் புரிபவர்.

Source: INDIAN EXPRESS


Share this News:

Leave a Reply