காந்தியா? கோட்சேவா? – மோடிக்கு காங்கிரஸ் கிடுக்கிப்பிடி!

பிரதமர் மோடியின் ஆதரவு மகாத்மா காந்திக்கா?, நாதுராம் கோட்சேவுக்கா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது:

மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசி உள்ளார் இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?

மேலும் மகாத்மா காநதியை தொடர்ந்து அவமதித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது மோடி எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. தற்போது அனந்தகுமார் ஹெக்டேயும் காந்தியை அவமதித்துள்ளார்.

அனந்தகுமாரின் கருத்துக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது தேச துரோக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். அனுராக் தாக்கூர், அனந்தகுமார் ஹெக்டே இருவரையும் பா.ஜ.,வில் இருந்து நீக்க வேண்டும். பிரதமர் மோடி தனது விஸ்வாசம் காந்திக்கா? இல்லை கோட்சேவுக்கா? என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply