குஜராத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய சரிவு – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!

Share this News:

அகமதாபாத் (04 ஜூன் 2020): குஜராத்தில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது எதிர் வரும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முன்னதாக முதல்வர் விஜய் ரூபானியை அந்த இரு எம்.எல்.ஏக்களும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் கொடுத்தனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News: