மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

Share this News:

பெங்களூரு (20 டிச 2020): “இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இப்ராகிம் தெரிவித்துள்ளார்ர்

கர்நாடகாவில் பாஜக அரசு அறிமுகப்படுத்திய பசு வதை சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் ஆதரவளித்துள்ளார். அதேவேளை, “நாட்டில் இந்து பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் முஸ்லிம் சமூகம் ஈடுபடக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

மேலும் முஸ்லிம் சமூகம் இதை உணர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்ராஹிம் வலியறுத்தியுள்ளார்.


Share this News:

Leave a Reply