அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் – புத்த பிக்குகள் போராட்டம்!

Share this News:

அயோத்தியா (15 ஜூலை 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று புத்த பிக்குகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது இராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சமீபத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, நிலத்தை சமன்செய்ததில் பல்வேறு உடைந்த சிலைகள், சிவப்பு மணற்கல் தூண்கள், உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

இவை புத்தமதத்தின் கலாச்சாரத்திற்கு சொந்தமானது என்று புத்தபிக்குகள் தெரிவித்துள்ளனர். மேலும் இராமர் கோவில் கட்டும் இடத்தை யுனெஸ்கோவின் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அயோத்தியா மாவட்ட தலைமை அலுவலகத்தின் முன்னிலையில் புத்தபிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share this News: