மேற்கு வங்கத்தில் அதிரடி திருப்பம் – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்பி மனைவி!

Share this News:

கொல்கத்தா 921 டிச 2020): மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

முன்னாள் ஆசிரியரான சுஜாதா கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். ‘எனக்கு ஆறுதல் தேவை, எனக்கு மரியாதை தேவை. நான் ஒரு திறமையான கட்சியின் திறமையான தலைவராக இருக்க விரும்புகிறேன். பாஜகவில் அது இல்லை. அதில் தவறான மற்றும் ஊழல் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். என்று சுஜாதா கான் தெரிவித்தார்.

இந்நிலையில் சவுமித்ரா கான் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply