ஒரேயொரு வீடியோ கிளிப் – மத்திய அரசை மிரள வைத்த விவசாயிகள்!

Share this News:

புதுடெல்லி (29 ஜன 2021): உத்திர பிரதேச விவசாயிகள் திடீரென ஒன்று திரண்டு போராட்டத்தில் இணைந்துள்ளதால் மத்திய அரசு மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிக்கைட் கண்ணீர் விட்டு அழுதவாரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “மத்திய அரசு விவசாயிகளை அழிக்க விரும்புகிறது, இது நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு எதிரான சதி சட்டம் திரும்பப் பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை விட வேறு வழியில்லை” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.” அந்த வீடியோ கிளிப் வைரலானதை அடுத்த சில மணிநேரங்களில் காசிப்பூர் எல்லையில் இருந்து 150 கி.மீ தூரத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டுள்ளனர்.

நேற்று இரவு உ.பி. நிர்வாகம் காசிப்பூரிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட பதட்டமான நிலைப்பாட்டிற்குப் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தன்னர்.

முன்னதாக காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போராட்ட இடத்தில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டது, ஆனால் அது பின்னர் மீண்டும் வழங்கப்பட்டடது.


Share this News:

Leave a Reply