வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

Share this News:

புதுடெல்லி (19 நவ 2022): நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது.

இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் இந்திய வங்கி சங்கத்துக்கு, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் வாயிலாக பிரச்னையை விளக்கியது.

டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமூக உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் இன்று நடக்க இருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்ற இந்திய வங்கிகள் சங்கத்தினர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாதகமான பதில் அளித்தனர்.

இதனால் இன்று நடத்துவதாக இருந்த வேலை நிறுத்தத்தை பணியாளர்கள் கைவிட்டு வழக்கம் போல வங்கி சேவையில் ஈடுபட உள்ளனர்.


Share this News:

Leave a Reply