22 நாட்களில் அதானி பங்குகள் பாதிக்கு மேல் இழப்பு!

மும்பை (14 பிப் 2023): ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி தனது நிகர மதிப்பில் சரிவைக் கண்டு வருகிறார்.

அவரது நிறுவனப் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. வெறும் 22 நாட்களில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி இழந்துள்ளார்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்ததால் மூடப்பட்டன.

மேலும் அதானி எண்டர்பிரைசஸ், ஏசிசி, அம்புஜா சிமென்ட் ஆகியவை நஷ்டத்தில் வர்த்தகமாகின்றன. அதானி குழுமத்தின் அதானி போர்ட் பங்கு மட்டுமே சரிவை சந்திக்கவில்லை.

அதானி உலகின் பில்லியனர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து 24 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply