காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு – இது வேறமாதிரி!

Share this News:

கர்னூல் (15 செப் 2020): ஆந்திராவில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் நேற்று 20 வயது பெண் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை காதலித்து வந்துள்ளனர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலனின் பெற்றோர் அவருக்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ததாகவும், அவர் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் காதலன் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, காதலியிடம் அவருடன் இணைந்து வாழ முடியாது என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட காதலன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினர் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறினார். இந்நிலையில் ஆத்திரமடைந்த காதலி, காதலனின் முகத்தின் மீது ஆசிட் வீசியுள்ளார்.

பெந்தா கோட்டாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பெண் அவர் மீது ஆசிட் வீசியதாக நந்தியல் தாலுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு ஆளாகியவர் நந்தியல் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீசிய பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுவாக காதலன்தான் காதலி மீது ஆசிட் வீசுவான், இது வேறமாதிரி நடந்துள்ளது.


Share this News:

Leave a Reply