திரிணாமுல் காங்கிரஸில் இணையும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்!

கொல்கத்தா (05 ஜூலை 2021): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இணையவுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி, கடந்த சில வாரங்களாக டி.எம்.சி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

முன்னதாக முகர்ஜி கடந்த மாதம் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார். இதனை அடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் டிஎம்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அபிஜித் முகர்ஜி திங்களன்று கட்சியில் சேர வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply