பாஜகவில் இணைந்த ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் – ஆம் ஆத்மி பாஜக மீது புகார்!

Share this News:

புதுடெல்லி (18 ஆக 2020): சிஏஏ எதிர்ப்பு, டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டெல்லி ஷாஹீன்பாக் போராட்டம் பாஜக திட்டமிட்டு நடத்திய சதி என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 24 மணி நேரமும் 101 நாள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை பின்பற்றி நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி ஷாஹீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட நன்கு அறிமுகமான முகங்களான ஷாஜாத் அலி, மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மெஹ்ரீன் மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி தபாசம் உசேன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ஷஹீன்பாக் போராட்டமே பாஜகவின் திட்டமிடல் என்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் டெல்லி தேர்தலை கணக்கில் கொண்டே ஷஹீன்பாக் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தற்போது அது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் முக்கியத்துவம் பெற பாஜக, டெல்லி போலீசாருடன் சதி செய்து ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply