60 வயது நோயாளி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர் கைது!

Share this News:

நாசிக் (12 ஜன 2023): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள அப்நகர் பகுதியில் செவ்வாய்கிழமை, 22 வயது இளைஞன் ஒரு வீட்டுக்குள் புகுந்து 60 வயது மூதாட்டி பெண்ணை பாலியல் சித்திரவதை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரர் அருகில் வசிக்கிறார்.

செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார். கத்தினால் கொன்று விடுவதாக மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு குற்றவாளி திரும்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலையில் தேநீர் கொடுக்க வந்த தனது சகோதரனிடம் நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் கூறியதை அடுத்து காவல்துரையில் புகார் அளித்துள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply