திருமணம் முடிந்து புது மாப்பிள்ளை பெண்ணை பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

உகாண்டா (16 ஜன 2020): உகாண்டாவில் புதுமாப்பிள்ளை தனது மனைவி ஒரு பெண்ணே அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உகாண்டாவைச் சேர்ந்த இமாம் முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை. இதற்கு பெண் அனுமதிக்கவும் இல்லை. இந்நிலையில் முகமதுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிலிருந்து துணிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை புதுப்பெண் திருடியதாக புகார் கூறியுள்ளார். இதையடுத்து நபுகீரா…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...

பணத்துக்காக தவறை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது – மகாதீர் முஹம்மது!

கோலாலம்பூர் (15 ஜன 2020): பணத்துக்காக இந்தியா செய்யும் தவறை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் என மலேசிய பிரதமர் மகாதீர் தொடர்ந்து இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இது மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட…

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தூக்குத் தண்டனை ரத்து!

பிறகு 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி வைத்ததுடன், தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய நீதிபதிகளை அவா் சிறையிலடைத்தாா். இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு…

மேலும்...

அமெரிக்க ஈரான் பதற்றம் – அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்!

பாக்தாத் (13 ஜன 2020): ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரானும் கூறியது. இந்நிலையில் ஈராக்கின் பாக்தாக் அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி…

மேலும்...

கேம்பிரிட்ஜின் மேயராக தேர்வாகியுள்ள முதல் முஸ்லிம் பெண்!

லண்டன் (11 ஜன 2020): இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தின் மேயராக ஒரு முஸ்லிம் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளர். சும்புல் சித்தீக்கி என்ற முஸ்லிம் பெண் கேம்பிரிட்ஜின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சித்திக்கி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...

ஓமன்(மஸ்கட்) அதிபர் மரணம்!

மஸ்கட் (11 ஜன 2020): ஓமன் நாட்டின் அதிபர் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்(79) உடல் நலக்குறைவால் காலமானார். வளைகுடா நாடுகளில் அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர் என்று பெயர் பெற்ற சுல்தான் காபூஸ், 1970 லிருந்து ஓமன் நாட்டின் மன்னராக இருந்து வந்தவர். இந்தியாவில் படித்த சுல்தான் காபூஸ் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர். சங்கர் தயாள் சர்மா ஓமன் நாட்டிற்கு வந்தபோது, மரபை மீறி நேரடியாக விமான…

மேலும்...

துபாயில் இடியுடன் கூடிய பலத்த மழை – வீடியோ!

துபாய் (11 ஜன 2020): துபாய் அல் அய்ன் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இரவு இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது. சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...