பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தூக்குத் தண்டனை ரத்து!

பிறகு 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி வைத்ததுடன், தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய நீதிபதிகளை அவா் சிறையிலடைத்தாா்.

இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையிலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, கடந்த 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தை முஷாரஃப் முடக்கிவைத்து, நெருக்கடி நிலையை அறிவித்தது, அரசமைப்புச் சட்டத்தின்

விதி 6-இன்படி குற்றமாகும். எனவே, முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், தண்டனைக்கு முன் முஷாரஃப் இறந்தால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்ற சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

முஷாரஃப் மீது சிறப்பு நீதிமன்றம் நடத்திய விசாரணை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அவருக்கு சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது ‘அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்’ (ஏபிஎம்எல்) கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரஃப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய, நீதிபதிகள் சையத் மஜஹர் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி மற்றும் சவுத்ரி மசூத் ஜஹாங்கிர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, முஷாரஃப்பிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைப்பது “அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று ஒருமனதாக அறிவித்த நீதிபதிகள், முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply