ஓமன்(மஸ்கட்) அதிபர் மரணம்!

Share this News:

மஸ்கட் (11 ஜன 2020): ஓமன் நாட்டின் அதிபர் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்(79) உடல் நலக்குறைவால் காலமானார்.

வளைகுடா நாடுகளில் அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர் என்று பெயர் பெற்ற சுல்தான் காபூஸ், 1970 லிருந்து ஓமன் நாட்டின் மன்னராக இருந்து வந்தவர்.

இந்தியாவில் படித்த சுல்தான் காபூஸ் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர். சங்கர் தயாள் சர்மா ஓமன் நாட்டிற்கு வந்தபோது, மரபை மீறி நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இவ்விவகாரம் ஓமன் நாட்டில் சர்ச்சையானபோது, அதிபராக செல்லவில்லை ஒரு மாணவனாக சென்று வரவேற்றேன் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் அரபுலகில் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply