விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலையின் பின்னணியில் வெளியான புதிய ஆதாரம்!

சென்னை (17 டிச 2020): பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை…

மேலும்...

குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது….

மேலும்...

ரஜினியை விடாது துரத்தும் வாடகை பாக்கி விவகாரம் – உயர் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்!

சென்னை (16 டிச 2020): நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு….

மேலும்...

கேரள தேர்தலில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றி!

திருவனந்தபுரம் (16 டிச 2020): கேரளா உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர்கள் மாநிலத்தில் 74 இடங்களில் வென்றுள்ளனர். மூன்று முனை போட்டியில் தனியாக போட்டியிடுவதின் மூலம் எஸ்.டி.பி.ஐ பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று மாநில செயலாளர் முஸ்தபா கொமேரி தெரிவித்தார். எஸ்டிபிஐ வெற்றி பெற்ற இடங்கள்: காசராகோடு – 7 கண்ணூர் – 9 கோழிக்கோடு – 3 வயநாடு – 0 மலப்புரம் – 3 பாலக்காடு – 5 திருச்சூர் – 4…

மேலும்...

ரஜினி, உவைஸியுடன் கூட்டணி – கமல் ஹாசன் பதில்!

நெல்லை (16 டிச 2020): உவைஸி, ரஜினியிடன் கூட்டணி வைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். நெல்லையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் , யாருடனும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஓவைசியோடு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை, ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம். ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான்…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

பாஜகவில் குஷ்பு புறக்கணிப்பு!

சென்னை (14 டிச 2020): பாஜகவில் குஷ்பு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பல கட்சிகளில் இருந்து விட்டு கடைசியாக காங்கிரஸிலிருந்து பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை குஷ்பு, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சியில் இணைந்தார். ஆனால் இதுவரை அவரை அக்கட்சியினர் ஒருவர் கூட மதித்ததாக தெரியவில்லை. திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் அவர் பேசிய வீடியோ சினிமாவில் நடிப்பதுபோல் டேக் கட் சொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கேலிக்கு ஆளானார். இது இப்படியிருக்க தமிழக சட்டமன்ற…

மேலும்...

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (14 டிச 2020): சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி 10 சதவீத விடுதி மாணவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு…

மேலும்...

லவ் ஜிஹாத் – மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடிகர் சித்தார்த் காட்டம்!

சென்னை (08 டிச 2020): உத்திர பிரதேச அரசின் மத மாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை இந்துத்வாவினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடைசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ளார். கட்டாய மத மாற்றத்திற்கே இந்த சட்டம் என்கிறபோதிலும், தன்னார்வமாக மதம் மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் 60 நாட்களுக்கு முன்பே அனுமதி பெறவேண்டும். அவ்வாறு…

மேலும்...

நான் சங்கி பி டீமா? – கமல்ஹாசன் பளார் பதில்!

சென்னை (07 டிச 2020): சூரப்பா விவகாரத்தில் தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறி, அவரை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு கமல்ஹாசன் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதோடு, கமல்ஹாசனை சங்கி…

மேலும்...