நிவர் போனாலும் இன்னொரு புயல் – தமிழகத்திற்கு அடுத்த புயல் எச்சரிக்கை!

சென்னை (27 நவ 2020): நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வங்ககடலில் 23ம் தேதி உருவான நிவர் புயல் நேற்று (26ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது.. இந்த புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை…

மேலும்...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க – சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை!

மதுரை (27 நவ 2020): சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் அக். 31ல் இறந்தார். இதன்பிறகு, கும்பகோணத்தில் உள்ள துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில்…

மேலும்...

லைட் அடிச்சு பார்க்க ஆசை – கமல் விருப்பம்!

சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது….

மேலும்...

நிவர் புயலால் 10 லட்சம் பேர் பாதிப்பு!

சென்னை (27 நவ 2020): நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளில் வீடுகளில் புகுந்த வெள்ளம், மின்சார துண்டிப்பால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்ககடலில் கடந்த 16ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரமடைந்து நிவர் புயலாகவும் அதி தீவிர புயலாகவும் மாறியது. இது நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது. இந்தப் புயல்…

மேலும்...

வங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்!

சென்னை (26 நவ 2020): தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு பதினொன்றரை முதல் இன்று அதிகாலை இரண்டரை…

மேலும்...

எல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி!

அனைத்து தமிழ் செய்தி சேனல்களின் லைவ் செய்திகள் ஒரே தளத்தில் தெரியும் வகையில் இந்நேரம் செய்தி தளத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று செய்திகளை தெரிந்து கொள்ளாமல் ஒரே தளத்தில் தேவையான செய்திகளை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஒரு தளத்தில் விளம்பரம் வந்தால் வேறு தளத்தை க்ளிக்கி செய்தியை தெறித்து கொள்ளலாம். மேலும் அடுத்த தளத்திற்கு சென்றாலும் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தளமும் உங்கள் பார்வையில் இருக்கும். இதற்கு…

மேலும்...

அஹமது படேல் இல்லாத காங்கிரசை நினைத்துப்பார்க்க முடியவில்லை – கபில் சிபல் உருக்கம்!

புதுடெல்லி (25 நவ 2020): அஹமது படேல் இல்லாமல் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? என்று தெரியவில்லை என அஹமது படேலின் நண்பரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிட் பாதிப்பால் காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் முதல் நபராக படேல் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது…

மேலும்...

மெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்!

சென்னை (25 நவ 2020): தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக…

மேலும்...

செம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் – அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை (25 நவ 2020): செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒரு வாரத்திற்குப்‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு…

மேலும்...

நிவர் புயல் – இரு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

சென்னை (24 நவ 2020): நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்…

மேலும்...