பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்!

சென்னை (12 பிப் 2022): திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு…

மேலும்...

தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

தஞ்சாவூர் (12 பிப் 2022): தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் 3 இஸ்லாமியர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துன் தொடர்புள்ளதாக கூறப்படும் அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், இவர், சமூக வலைத்தளங்களில் இந்துக்களை பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், இது மதமோதல்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…

மேலும்...

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது…

மேலும்...

சென்னை பாஜக தலைமை அலுவலக குண்டு வெடிப்பில் தொடர்புடைய வினோத் என்பவர் கைது!

சென்னை (10 பிப் 2022): சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர்…

மேலும்...

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் – சீமான்!

சென்னை (09 பிப் 2022): மாணவர்களின் மனங்களில் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவதாக பாஜக மீது சீமான் சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத…

மேலும்...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கூடாது – தமிழக அரசு!

புதுடெல்லி (09 பிப் 2022): கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில், தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு…

மேலும்...

ரோஜா முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!

சென்னை (07 பிப் 2022): ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள். அவ்வாறு…

மேலும்...

சவூதியின் தவக்கல்னா மற்றும் அப்ஷர் செயலிகளை இணைக்க முடிவு!

ரியாத் (06 பிப் 2022): சவூதி அரேபியாவின் முக்கிய செயலிகளான தவக்கல்னா மற்றும் அப்ஷர் ஆகியவற்றை ஒரே செயலியாக இணைக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. தவக்கல்னா மற்றும் அப்சர் ஆகியவை நாட்டில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகள். பல அரசு சேவைகளை உள்ளடக்கிய இந்த செயலிகளை இணைப்பதன் மூலம், முழு சேவையும் ஒரே செயலியாக மாற்றப்படும். இவைகளை இணைப்பதன் மூலம் ஒரே தளம் மூலம் பல்வேறு அரசு சேவைகள் கிடைக்கும்….

மேலும்...

ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (05 பிப் 2022): தமிழக ஆளுநர் அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது. இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

மேலும்...

மகாத்மா காந்தியின் படுகொலையை நினைவுகூர்வது குற்றமா?

சென்னை (03 பிப் 2022): மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவால் தேசத்தந்தை காந்தி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்வது குற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகமது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக முன்னணியில் நின்று போராடிய…

மேலும்...