கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை – பாஜக பதில்!

சென்னை (28 அக் 2022): கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் அக்டோபர் 31 ஆம் தேதி கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும்,…

மேலும்...

பாஜக ஐடி பிரிவு நிர்மல் குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நோட்டீஸ்!

சென்னை (28 அக் 2022): யூடூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் தகவல் தெரிவித்ததாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கோரி செந்தில் பாலாஜி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதில் டாஸ்மாக் கொள்முதலில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன்…

மேலும்...

கோவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் – அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை!

சென்னை (26 அக் 2022) : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், கோவை மக்களின் அச்சத்தை போக்கிட பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில், காவல்துறை உடனடியாக…

மேலும்...

கோவை கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது!

கோவை (25 அக் 2022): கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் காலை நடந்த கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்…

மேலும்...

கோவை கார் வெடிப்பு பின்னணியில் பயங்கரவாத தொடர்பு? – காவல்துறை தீவிர விசாரணை!

கோவை (24 அக் 2022): ஞாயிற்றுக்கிழமை காரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், உயிரிழந்தவரின் வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இறந்தவரின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று காலை நடந்த குண்டுவெடிப்பில் ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். பொறியியல் பட்டதாரியான ஜமோசா முபீனின்…

மேலும்...

மனைவி மீது சந்தேகம் – கழுத்தை நெரித்து மனைவி கொலை!

நாகர்கோவில் (23 அக் 2022): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர் (32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை ஏற்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பத்மா (30). ஆண்டனி வெனிஸ்டரும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 8 வயதிலும், 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள்…

மேலும்...

கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கடற்படை மீது குற்றச்சாட்டு!

காரைக்கால் (21 அக் 2022): கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத்போது, ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்திய…

மேலும்...

15 நாட்கள் காத்திருங்கள் – நடிகர் சரத்குமார்!

சென்னை (20 அக் 2022): சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பேசியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், இன்னும் 15 நாட்களில் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திபாவளி பரிசுகளை கட்சினருக்கு கட்சி தலைவர் சரத்குமார் வழங்கினார். இதை தொடர்ந்து…

மேலும்...

தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும்…

மேலும்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – சசிகலா!

சென்னை (19 அக் 2022): ஜெயலலிதா சிகிச்சையில் குளறுபடி செய்யப்படவில்லை, எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதற்கு சசிகலாவே முழு பொறுப்பு என்றும் ஆறுமுகசாமி கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.கே.சசிகலா ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை நிராகரித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சையில் தான் உட்பட 3 பேர் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்றும்…

மேலும்...