கோவை கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது!

Share this News:

கோவை (25 அக் 2022): கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் காலை நடந்த கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply