திமுகவினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

ரிஷிவந்தியம் (21 ஜூன் 20220): மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 13-ம் தேதி வசந்தம் கார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் கொரோனா பாதிப்பு…

மேலும்...

இன்று முதல் தீவிர ஊரடங்கு அமல்!

சென்னை (21 ஜூன் 2020): இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 00 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை…

மேலும்...

தமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது!

சென்னை (21 ஜூன் 2020): தமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் இன்று காலை 10:17 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 01:30 வரை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் தெரியும் சூரிய கிரகணம், 34 சதவீதம் வரை தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

சென்னை விமான நிலைய சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜூன் 2020): சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது . அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது அதி வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு…

மேலும்...

மேலக்காவேரியில் உள்ள குளங்கள் தூர்வாரல் – ஆட்சியர் ஆய்வு!

மேலக்காவேரி (18 ஜூன் 2020): கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதி குளங்கள் தூர் வாறுவதை தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். மேலக்காவேரியில் உள்ள குளங்கள் நீர்நிலைகள் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி நீர் வருவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக மேலக்காவேரி பள்ளிவாசல் குளத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திரு. ம. கோவிந்தராவ் மேற்பார்வையிட்டார். இ.ஆ.ப. அவர்கள் மற்றும் கோரிக்கை மனு அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட மிஸ்வா குழுமத்தினர் மற்றும்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா – 49 பேர் மரணம்!

சென்னை (18 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும்…

மேலும்...

முதல்வர் எடப்பாடியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் மரணம் – அதிர்ர்சியில் முதல்வர்!

சென்னை (17 ஜூன் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். அந்த வகையில் அலுவலக ரீதியாக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும்போது அடிக்கடி நேரடியாக சந்திப்பவர்களில் இவரும் ஒருவர். முதல்வரை சந்திக்க வருபவர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை தாமோதரன் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு…

மேலும்...

ஹெல்ப்குரூப் திருவை சார்பில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்திவாசிய உதவி!

திருவை (16 ஜூன் 2020): ஹெல்ப்குரூப்திருவை சார்பில் பரளியாறு, வாழயத்து வயல், கீரிப்பாறை, பால்குளம் போன்ற பகுதிகளில் வாழும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களின் 355 குடும்பங்களுக்கு  ரூபாய் 2,48,500(இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து ஐந்நூறு) மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது மேலும் மலைவாழ் கிராமங்கள் புறத்தி மலை , வெள்ளருக்கு மலை, வட்டப்பாறை, போன்ற கிராமங்களுக்கு 90 குடும்பங்களுக்கு ரூபாய் 63,000/-செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய kit வழங்கப்பட்டது.மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம்…

மேலும்...