திமுகவினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

Share this News:

ரிஷிவந்தியம் (21 ஜூன் 20220): மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 13-ம் தேதி வசந்தம் கார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வந்தது.


Share this News: