கொடுமையிலும் கொடுமை – திமுக மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

மதுரை (12 டிச 2022): மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சென்னை நகர மேயர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்ததால், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார். “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை! மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும்...

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட அதிமுக பெண் நிர்வாகி!

சென்னை (12 டிச 2022): ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியின் பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற…

மேலும்...

மொபைலைக் கீழே வைக்க முடியவில்லை – பாராட்டுகள் குவிகின்றன: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (11 டிச 2022): “மாண்டஸ் புயலை திறமையாகக் கையாண்டதாக, அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:- “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்தபோது கொரோனா-வின் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர்…

மேலும்...

பாஜகவில் விழும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் – மேலும் ஒரு தலைவர் பாஜகவிலிருந்து விலகல்!

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜகவில் நிலவி வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் அக்கட்சியில் உள்ள பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் முக்கியமான பொறுப்புகளில் இருந்த பாஜக நிர்வாகிகள் விலகி, தாங்கள் முன்பு இருந்த கட்சிகளிலேயே சேர்ந்து வருகின்றனர். திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம், பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவிலேயே சரண்டர் ஆகி, அங்கும் முக்கிய பதவியைப் பெற்றிருக்கிறார். பாஜக பொருளாதார அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி,…

மேலும்...

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் – VIDEO

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

மேலும்...

பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி மீஞ்சூர் சலீம் கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்ணாமலைக்கு மிக நெருக்கமான இவர், பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டும் அமர் பிரசாத் ரெட்டி மீது உண்டு. இந்நிலையில் தமிழக பாஜக சார்பில்…

மேலும்...

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் – VIDEO

சென்னை (10 டிச 2022): சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத்…

மேலும்...

அடிக்குது புயல் – வெளுக்குது மழை!

சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம்,…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

அதிராம்பட்டினம் (09 டிச 2022): அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் வியாழன் அன்று திடீரென கடல் உள் வாங்கியதால் கரையோரம் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. கடந்த கஜா புயலின்போதும் இதேபோல கடல் உள் வாங்கியது, மேலும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தற்போது மழை புயல் காலமாதலால் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியுள்ளதால் மீண்டும்…

மேலும்...