விஸ்வரூபமெடுக்கும் ராமர் கோவில் நில பேர ஊழல் – மோடி விளக்கமளிக்க சாதுக்கள் கோரிக்கை!

புதுடெல்லி (26 ஜூன் 2021): அயோத்தி ராமர் கோவில் நில பேர ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ…

மேலும்...

தலித் இளைஞர் முஸ்லீம் பெண் படுகொலை – கவுரவக் கொலையா?

பெங்களூரு (26 ஜூன் 2021): தலித் இளைஞரும் முஸ்லீம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது. அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணும் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் நேற்று முன் தினம் வயல் வெளி…

மேலும்...

மசூதி மினாரா இடிப்பு – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மதுரா (24 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மசூதியின் மினாரா, மர்ம நபர்களால் இடிக்கப் பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மதுரா மாவட்டத்தின் சாட்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதி மினாராவை புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இடித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலை அடுத்து கிராமத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக (மதுரா கிராமப்புற) போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஷ் சந்திரா கூறினார். “இச்சம்பவத்தை…

மேலும்...

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தியது அந்த காலம் – ஒரே பொய்யில் கல்யாணம் நின்றது இந்த காலம்!

லக்னோ (24 ஜூன் 2021): கல்யாண மாப்பிள்ளைக்கு உள்ள குறையை மறைத்ததால் சந்தேகித்த புதுமணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திர பிரதேசம் ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகே உள்ளது ஜமாலிபுர் என்ற கிராமதத்தில் வசித்து வருபவர் அர்ஜூன் சிங்… இவரது மகள் பெயர் அர்ச்சனா.. இவருக்கு அச்சால்டா பகுதியைச் சேர்ந்த சிவம் என்ற மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு பேசி முடித்தனர்.. நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 20ம் தேதி தான் இவர்களுக்கு…

மேலும்...

பாஜக வைரஸ் – சானிடைசர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (24 ஜூன் 2021): பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 150 பேருக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறி அவர்களை சானிடைசர் அடித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், பாஜக கூடாரம் காலியாகி வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில் பிர்பூமின் இளம்பஜார் தொகுதியில் 150 பாஜகவினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக வைரஸ்…

மேலும்...

தாவூத் இப்ராஹிம் சகோதரர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது!

மும்பை (23 ஜூன் 2021): நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பஞ்சாபிற்கு 25 கிலோ சரஸ் போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் – ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​எண்ணெய் பத்திரங்களில் இருந்த பல கோடி ரூபாய்கள் திருப்பிச் செலுத்தப் படவில்லை. இப்போது நாங்கள் அந்தத் தொகையினை, முதல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்துகிறோம். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதுதான் பெட்ரோல் விலை பெருமளவில் அதிகரிக்க வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசச் சந்தையில் கச்சா…

மேலும்...

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவிட் மரணத்தை தவிர்க்கலாம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதமும் கோவிட் இறப்புகளை தவிர்க்கலாம் என்று ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே…

மேலும்...

முன்னாள் பிரதமருக்கு ரூ 2 கோடி அபராதம் – வெளியில் பேச தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2021): முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் உட்கட்டமைப்பு நிறுவனமான Nandi Infrastructure Corridor Enterprise Limited (NICE) என்ற நிறுவனம் பெங்களூரு-மைசூர் இடையே உட்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தேவகவுடா, நந்தி நிறுவனம் மக்களின்…

மேலும்...

மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர் கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர். பணம்,…

மேலும்...