இந்த ஆண்டின் டாப் 20 சுற்றுலா தளங்கள் எவை தெரியுமா?

சிறந்த சுற்றுலா தளங்களைக் கொண்ட நகரங்கள்
Share this News:

பாரிஸ், பிரான்ஸ் (13 டிசம்பர் 2023): இந்த ஆண்டின் தலை சிறந்த சுற்றுலாத் தளங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாரிஸ் நகரம், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகின் சிறந்த 100 நகரங்களை, பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கும் நிறுவனம் யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) ஆகும்.  இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இது 2023 ஆண்டின் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நகரங்களை அறிவித்துள்ளது.

சிறந்த சுற்றுலா நகரம் (முதல் இடம்)

பொருளாதார மற்றும் வணிக செயல்திறன், சுற்றுலா செயல்திறன், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுற்றுலாக் கொள்கை மற்றும் பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட ஆறு முக்கிய அளவீடுகளின் அடிப்படையில் அமைந்த ஒப்பீட்டிலிருந்து பெறப்பட்ட பட்டியலில், உலகின் சிறந்த சுற்றுலா தளங்கள் பட்டியலில் பாரிஸ் முதலிடத்தில் உள்ளது. (இந்நேரம்.காம்)

பிரான்ஸ் தலைநகர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்த விருதைப் பெற்றுள்ளது என Euromonitor International இன் மூத்த மேலாளர் Nadejda Popova தெரிவித்துள்ளார்.

சிறந்த சுற்றுலா நகரம் (இரண்டாம் இடம்)

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிறந்த சுற்றுலா நகரம் (மற்ற இடங்கள்)

மூன்றாவது இடத்திலிருந்து தொடங்கி டாப் 20 தரவரிசையில் மீதமுள்ள இடங்கள்:

ஸ்பெயினின் மாட்ரிட் (3வது),

ஜப்பானின் டோக்கியோ (4வது),

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் (5வது),

ஜெர்மனியின் பெர்லின் (6வது),

இத்தாலியின் ரோம் ( 7வது),

அமெரிக்காவில் நியூயார்க் (8வது),

ஸ்பெயினில் பார்சிலோனா (9வது),

இங்கிலாந்தில் லண்டன் (10வது),

சிங்கப்பூர் (11வது),

ஜெர்மனியில் முனிச் (12வது),

இத்தாலியில் மிலன் (13வது),

சியோல் தென் கொரியா (14வது),

அயர்லாந்தில் டப்ளின் (15வது),

ஜப்பானின் ஒசாகா (16வது),

ஹாங்காங் (17வது),

ஆஸ்திரியாவின் வியன்னா (18வது),

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (19வது),

போர்ச்சுகலில் லிஸ்பன் (20வது) .

இப்பட்டியலில், ஐரோப்பிய நாடுகள் பெருமளவு முதலிடம் வகிக்கிப்பது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: