இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

Share this News:

ஜகார்த்தா (14 டிச 2021): இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள மெளமரே அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 டிசம்பரில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply