ஹிஜாப் அணிவதையே விரும்புகிறேன் – மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல மாடல் திடீர் அறிவிப்பு!

Share this News:

நியூயார்க் (27 நவ 2020): இஸ்லாமிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும் விதமாக மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க மாடல் ஹலீமா ஏடன் அறிவித்துள்ளார்.

ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் 23 வயதான அமெரிக்க மாடலான ஹலீமா ஏடன். இவர் ஹிஜாப் அணிந்து, கன்யே வெஸ்டின் யீஸி உள்ளிட்ட முக்கிய பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து மாடல் உலகில் தொடர்வது நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறி, மாடல் உலகிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் இஸ்டாகிராமில் தெரிவித்துள்ளதாவது:

“நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் , மாடல் உலகில் நான் தொடரப் போவதில்லை, பணத்திற்காக என் ஹிஜாபில் நான் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.. ஊரடங்கு காலங்களில் நான் பல பாடங்களை கற்றுக் கொண்டேன். இனி பழைய வழியில் செல்ல விரும்பவில்லை. ஹிஜாபுக்காக என் மாடல் உலகிலிருந்து விலகுவதே சரியானது.” என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த அறிவிப்பை சர்வதேச பிரபலங்களான ஜிகி ஹடிட், பெல்லா ஹடிட், உக்பாத் அப்திந்த், மற்றும் பாடகர் ரிஹானா போன்றவர்கள் பாராட்டி ஆதரித்துள்ளனர். .


Share this News:

Leave a Reply