பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அபராதம்!

Share this News:

இஸ்லாமாபாத் (24 மார்ச் 2022): தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு விதிகளை மீறியதாக இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் படி அரசுப்பணிகள் மேற்கொள்பவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைப் பார்வையிடக் கூடாது. ஆனால் இம்ரான்கான் அந்த விதிமுறையை மீறி பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண மலக்கண்ட் அருகே ஸ்வாட் பகுதியில் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.

இதுகுறித்த வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் உத்தரவிட்ட நீதிமன்றம் இம்ரான்கானுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.


Share this News:

Leave a Reply