இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து – பாகிஸ்தானில் பரபரப்பு!

இஸ்லாமாபாத் (14 பிப் 2022): பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதால், அவரது பதவிக்கு ஆபத்து முற்றியுள்ளது.

லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், நவாஸ் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, அவருக்கு அடுத்ததாக பிரதமராக யாரை முன்னிறுத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அஸிப் அலி ஸர்தாரியை பிரதமராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர இம்ரான் கானுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களை முன்னெடுக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply