ஆப்கன் – பெண்கள் உள்பட விமான நிலையப் பணியாளார்கள் பணிக்குத் திரும்பினர்

Share this News:

காபூல் (14 செப் 2021): ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பெண்கள் உள்பட முன்னாள் பணியாளர்கள் பலரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தாலிபான் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பணிக்குத் திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணி செய்யும் சுமார் நூறு பெண்களில் ஒருவரான லிடா என்ற பெண் கூறும்போது, “கடந்த மாதம் நாங்கள் சம்பளம் பெறும் நிலையில் இருந்தபோது காபூலுக்குள் தாலிபான் படையினர் வந்துவிட்டதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு நாங்கள் சம்பளம் பெற முடியாமல் போனது. இப்போது நாங்கள் சம்பளம் இன்றி பணியாற்றுகிறோம்” என்று கூறினார்.

“மீண்டும் எங்களைப் பணியில் தொடர அழைத்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. அரசு எங்களுக்கு இன்றுமுதல் சம்பளம் தர வேண்டும்” என்று ஸஹ்ரா அமீரி என்ற பணியாளர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனப் பணியாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர். தாங்கள் இப்போது அரசு விமானப் போக்குவரத்து முகாமையில் நேரடியாகப் பணியாற்றுவதாகக் கருதுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பிற விமான நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன என்றும் சில உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply