இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

Share this News:

நியூயார்க் (24 ஜூன் 2022): இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆறு அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், சட்டவிரோத கைதுகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் வீடுகள் சட்டவிரோதமாக இடிப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பு அமைதியான போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக்க. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) தெரிவித்துள்ளது.

இதுகுறித்த IAMC அறிக்கையில், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவியோடு, இந்திய அரசாங்கம் தனது சொந்த முஸ்லிம் குடிமக்களுக்கு எதிராக கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், இந்தியாவில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர், தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், முஸ்லிம்களது வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டன,” என்று IAMC இன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply