லண்டன் மசூதியில் பரபரப்பு – இமாம் மீது கத்தி குத்து- கைதானவனிடம் போலீஸ் தீவிர விசாரணை!

471

லண்டன் (23 பிப் 2020): லண்டன் மசூதியில் தொழுகை நடத்தும் இமாம் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய லண்டனில் 1944ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மசூதி ஒன்று உள்ளது. அங்கு தொழுகைக்காகவும் சுற்றிப் பார்க்கவும் கூட்டம் வருவது வாடிக்கை.

இந்நிலையில் தொழுகையை வழிநடத்தும் இமாம் மீது ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். இமாமுக்கு வயது 70. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக அறியப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பாகிஸ்தான் அரசு விளக்கம்!

தாக்குதல் நடந்தபின் போலிசார் வரும்வரை அங்கிருந்தவர்கள் சந்தேகப் பேர்வழியைப் பிடித்து வைத்து இருந்தனர். கடந்த சில வாரங்களாக அந்த ஆடவர் பள்ளிவாசலுக்கு வந்து போனதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் இமாமின் உயிருகு ஆபத்து இல்லை என்றபோதும், தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது? என்பது குறித்து கைது செய்யப்பட்டவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வழிபாட்டுத் தலத்தில் இவ்வாறு நடந்தது தமக்குப் பெரும் கவலை அளிப்பதாக சம்பவம் குறித்துப் பேசியிருந்தார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.