இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7

Amit Sha-Goebbels

பொய்யான தகவலை பரப்புதல் :
ஹிட்லரின் மிக நெருங்கிய நண்பர் கெப்பல்ஸ். 1924ஆம் ஆண்டு ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு நாஜிக் கட்சியில் சேர்ந்தவர். ஹிட்லரின் உதடுகளாகப் பணிபுரிந்தவர். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். நாஜிக்களால் ஹிட்லருக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டவர். நாஜிக் கட்சியின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர்,
யூத ஒழிப்புத் திட்டத்தை ஹிட்லர் மேற்கொண்ட காலத்தில், விஷயம் வெளியில் பரவாமல் இருப்பதற்காக தினசரி ஏதாவது புதிய பிரச்சனையின்பால் மக்களின் கவனத்தை திசைத் திரப்பி, பல காலம் யூதப் படுகொலையை வெளியில் தெரியாமல் இருக்கச் செய்தவர்.

மிகப் பெரிய பொய்யை வேண்டுமானாலும் சொல்லுங்கள். திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். எத்தனை முறை நீங்கள் அதை திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள் என்பதில் தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் கண்டிப்பாக மக்கள் அதை உண்மை என்று நம்பத் தொடங்கி விடுவார்கள். அதன் பின் நீங்களே மக்களிடம் அதைப் பொய் என்று சொன்னாலும் மக்கள் உங்களைத் தான் பொய்யன் என்று சொல்வார்களே தவிர அந்த விஷயத்தை பொய் என்று ஏற்கவே மாட்டார்கள்.

கெப்பல்ஸின் புகழ்பெற்ற பொ(ய்ய)ன் மொழி இது. இதன் அடிப்படையில் ஹிட்லருக்காக இவர் சொன்ன பொய்களுக்கு கணக்கே கிடையாது. எக்கச்சக்கமான பொய்களை அள்ளி வீசியிருக்கிறார்.

Goebbels
Goebbels

தன்னுடைய பொ(ய்ய)ன் மொழியை பல முறை நடைமுறைபடுத்தியும் காட்டியிருக்கிறார். ஜனவரி 1943-இல் ஜெர்மனியில் கெப்பல்ஸால் பிரச்சாரம் செய்யப்பட்ட வாசகம் இந்த (இரண்டாம் உலகப்) போரில் நாம் வென்று விட்டோம் என்பது. அடுத்த வருடம் இந்த பிரச்சாரம், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று மாறியது. மூன்றாம் வருடத்தில், நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று மாற்றம் அடைந்து. இப்படி தன்னுடைய பிரச்சாரத்தை பொய்யைக் கொண்டே ஆரம்பிக்கக் கூடியவராய் இருந்தார் கெப்பல்ஸ்.
தேவைக்கேற்றாற் போல் தன்னுடைய வாதத்தையும் மாற்றிக் கொள்வார். அவருடைய கற்பனையில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் உண்மையிலேயே நடந்தது போன்று அழுத்தமாக அறிவிப்பார். அவர் ஆதாரங்களைத் தேடிப் போகவில்லை. தேவைக்கேற்றாற் போல் ஆதாரங்களை உருவாக்கினார். புள்ளி விவரங்களைத் திருத்தினார். உண்மையை பொய்யாக்கினார். பொய்யை உண்மையாக்கினார்.
இதே நடவடிக்கையை தான் இந்துத்துவாவினரும் கொண்டுள்ளனர். ”பொய்களை பரப்புவதில் கெப்பல்ஸூக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை” என்பதை அவர்கள் அடிக்கடி நிரூபித்திருக்கின்றனர். இந்துதுத்வாவினரின் முக்கிய ஆயுதமே பொய்தான். அதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

Amit-Shah
Amit-Shah

இராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பா.ஜ.க.-வின் சமூக வலைதள பிரிவுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா பேசுகையில்…,
“நமது (பா.ஜ.க.) கட்சி உறுப்பினர்களுக்கென்று தனியாக வாட்ஸ்அப் குரூப் உள்ளது. அதில் 32 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். அதன் மூலம் நாம் எந்த செய்தியைப் போட்டாலும் அது வைரலாகிவிடும். இப்படித் தான் சமீபத்தில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ்யாதவ் அவரது தந்தை முலாயம்சிங்கை அடித்து விட்டதாக செய்தி போட்டோம். அது உண்மையா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியாது. ஆனால் அந்தச் செய்தி பெரும் வைரலாகி பரவியது. எனவே, செய்தியின் உண்மைத் தன்மையைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது மக்களிடம் சென்றாலே போதும். உண்மையோ பொய்யோ, எந்த செய்தியாக இருந்தாலும் பாஜகவினர் நினைத்தால் அதனை ஒரு மணி நேரத்தில் நாடு முழுவதும் பரப்பி விட முடியும்.”

 • இணையதளத்தில் ராகுல் காந்தியை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான். அதனால் அவர்களுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. மாநிலங்களிலும், நாட்டிலும் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் நமது ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
  ஹிட்லரின் நெருங்கிய நண்பரான கெப்பல்ஸ் நாஜிக்களுக்கு பொய் சொல்வதை கற்றுக் கொடுத்ததைப் போன்று, இந்தியாவில் இந்துத்துவ பாஜகவின் தலைவர் அமித்ஷா-வும் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பொய் சொல்ல கற்றுக் கொடுத்திருக்கிறார்.
 • இந்தியாவில் இந்துத்துவவாதிகள் பரப்பிய பொய்களுக்கு அளவே இல்லை. எக்கச்சக்கமான பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
  அவுரங்கசீப், திப்புசுல்தான் போன்ற மிகச்சிறந்த மன்னர்கள் மீது மத ரீதியலான பொய்கள்.
 • சிந்துசமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகமென்றும், இந்தியாவின் பூர்வீகர்கள் ஆரியர்கள் என்றும் வரலாற்று ரீதியிலான பொய்கள்.
 • பாபர் மசூதி, தாஜ்மஹால் போன்றவை ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று நிலரீதியிலான பொய்கள்.
 • 2016ல் மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்தது. இது மடத்தனம் என்று பல்வேறு அறிஞர்கள் கூறினர். ஆனால் இது நாட்டுக்கு நல்லது என்றும் இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழியும் என்று இந்துத்துவாவினர் பொய் பிரச்சாரம் செய்தனர்.
 • Rs 2000
  Rs 2000

  இதில் எஸ்வி சேகர் என்பவர் 2000 ரூபாய் நோட்டில் மைக்ரோ சிப் உள்ளது.இதை எங்கேயும் பதிக்கி வைக்க முடியாது. இதன் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்று ஒரு உலகமகா பொய்யைக் கூறி அசிங்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படி அரசியல் ரீதியலான பொய்கள் என்று இந்துத்துவாவினர் ஏராளமான பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

 • இது தொடர்பாக நக்கீரன் (07 ஜனவரி 2020) இதழில் 2019லும் தொடர்ந்த மோடியின் பொய்கள்…. என்ற தலைப்பின் கீழ் ஆதனூர் சோழன் என்பவர் இந்துத்துவாவினரின் பொய்களை அம்பலப்படுத்தி இருந்தார்.
 • தற்போது பா.ஜ.க.-வின் ஐடி செல் தலைவராக இருப்பவர் அமித் மால்வியா. இவர் இந்துத்துவ கட்சியின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் தலைவராக இருந்து பல்வேறு பொய்யானத் தகவல்களைப் பரப்புகிறார். பொய்களின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார். அவரால் பரப்பட்ட பொய்யான 16 தகவல்கள் என்று வினவு இணயதளத்தில் (17 பிப்ரவரி 2020) ஒரு கட்டுரையே வெளியிடப்பட்டுள்ளது.

அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

முன்னாள் பிரதமர் நேரு பல பெண்களோடு இருக்கும் படங்களை வெளியிட்டு நேரு பெண் பித்தர் என்பது போல் காட்ட முற்பட்டார். ஆனால், அவை நேருவின் சகோதரி, மருமகள் அல்லது ஜாக்குலின் கென்னடி போன்ற உலக நபர்களோடு இருக்கும் படங்கள். இந்த உண்மையை வெளிப்படுத்தி அமித் மால்வியாவை மக்கள் காரித் துப்பியதற்குப் பிறகு தன்னுடைய ட்வீட்டை நீக்கினார்.

shaheen-bagh
shaheen-bagh

தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் ஷாஹீன் பாக் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பினார். ஆனால் இது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டு என ஆல்ட் நியூஸ் மற்றும் நியூஸ்லாண்ட்ரி விசாரணை செய்து கூறியது.
இந்துத்துவாவினரின் பொய்கள் தொடர்பாக ஆனந்த் டெல்டும்டே அவர்கள் கூறிய கூற்றை எழுத்தாளர் மருதன் அவர்கள் தனது ‘குஜராத் இந்துத்துவம் மோடி” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

(இந்துத்துவாவினரால் நடத்தப்பட்ட வகுப்புவாத படுகொலைகளிலிருந்து) இந்தியாவின் கவனத்தை திசை திருப்ப வளர்ச்சியை முன்வைத்து மாபெரும் பிரச்சார இயந்திரம் சுழலவிடப்பட்டது. பலவிதமான கதைகள் உருவாக்கப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு இலவசங்கள் அளித்து அவர்களுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டது. ஒரு அசாதாரணமான தலைவரை உருவாக்கும் பொருட்டு பல கெப்பல்ஸிப் பொய்கள் உதிர்க்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் மோடியை ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோரின் வரிசையில் நிறுத்துகிறது. (பக்கம் 123)
இவ்வாறு. ஹிட்லரின் நாஜிசக் கொள்கையின் கோட்பாடுகளை தங்களுடைய கோட்பாடுகளில் ஒன்றாக இணைத்து இந்துத்துவ பயங்கரவாதிகள் கடைபிடித்து வருகின்றனர்.

ஆகவே பாஜக, பாசிச பாஜக என்று அழைக்கப்படுவது போன்று நாஜிச பாஜக என்றும் அழைக்கப்பட வேண்டும்.

ஒப்பீடு தொடரும்

பகுதி-1   பகுதி-2   பகுதி-3  பகுதி-4   பகுதி-5

பகுதி-6

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply