பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப் படைக்கு இந்து விமானி தேர்வு!

Share this News:

இஸ்லாமாபாத் (04 மே 2020): பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகானம் தர்பார்க்கார் பகுதியை சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அனைத்து இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி தெரிவிக்கையில் தேவின் நியமனம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவையிலும் இராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். பல மருத்துவர்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் மீது அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தினால், வரும் நாட்களில் பல ராகுல் தேவ் போல பலர் நாட்டுக்கு சேவை செய்யத் தயாராக வருவார்கள் என்றார்.


Share this News: