கொளுத்தி எடுத்த வெயிலால் 95 பேர் பலி!

Share this News:

நியூயார்க் (05 ஜூலை 2021): அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி மாகாண கவர்னர் கேட் பிரவுன் கூறும்போது, வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்திருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. நாங்கள் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொள்ள பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் காற்று 95 பேரை பறித்து சென்றிருப்பது கொடூரம் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply