இனி நடிக்கப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (14 டிச 2022): தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

உதயநிதி இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது.

இதில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப் பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உதயநிதி உதயநிதி பேசினார்.

அதில், “இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை. மாமன்னன் எனது கடைசி படம். கமல்ஹாசன் தயாரிப்பில் ஏற்கனவே ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து விலகியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply