தமிழக அமைச்சரவையில் மாற்றம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!

Share this News:

சென்னை (14 டிச 2022):தமிழ்நாடு அமைச்சரவை, இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக தேர்வாக உள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் நாளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதன்பின், பல்வேறு அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இந்த இலாக்கா மாற்றத்தின்போது புள்ளியில் துறை-யைக் கூடுதலாக கவனித்து வரும் ஐ பெரியசாமியிடம் இருந்து, அந்த துறை வாங்கப்பட்டு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புள்ளியில் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் பி.டி.ஆர். இதனால் அவருக்கு கூடுதலாக இந்த துறை அளிக்கப்பட உள்ளது.

தற்போது நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறை ஆகிய துறைகளை பி.டி.ஆர் கவனித்து வருகிறார். இந்த துறைகளை அவர் தொடர்ந்து கவனிப்பார்.

இதோடு கூடுதலாக புள்ளியில் துறை-யையும் பி.டி.ஆர் கவனிக்க உள்ளார்.


Share this News:

Leave a Reply