கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்து வந்தது. இதற்கிடையே கொரோனா அவருக்கு இல்லை என்றும் பரிசோதனை ரிசல்ட் வந்தது.

எனினும் சிறுநீரக பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply