மாநிலங்களவைக்கு திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா போட்டி – ஸ்டாலின் அறிவிப்பு!

Share this News:

சென்னை (22 ஆக 2021): மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக எம்.எம் அப்துல்லா பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply