மாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி – திடுக்கிட வைக்கும் பின்னணி!

Share this News:

சென்னை (13 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் மதவெறியே காரணம் என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்.. இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் கடந்த 9 ஆ,ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மத ரீதியிலான துன்புறுத்தலே காரணம் என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஃபாத்திமா லத்தீப் நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தவர். தொடர்ந்து ஐஐடியிலும் அனைத்து பாடங்களிலும் முதலிடம் பிடித்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அவரது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில்  அவர் தற்கொலைக்கு பின் அவரது போனை ஆய்வு செய்ததில் ஃபாத்திமா பேசிய ஆடியோ ஆதாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் பாத்திமாவை மத ரீதியில் துன்புறுத்தியுள்ளார். மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்,”என் மகளை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், அவரது பாடத்தில் வேண்டுமென்றே மதிப்பெண்ணை குறைத்து போட்டு பின்பு மாணவி புகார் அளித்த நிலையில் மதிப்பெண் திருத்தப்பட்டுள்ளது.” என்றார்.

இப்படி பல வேதனைகளையும், அழுத்தங்களையும் சந்தித்த நிலையிலேயே ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply