தஞ்சை அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்பு!

Share this News:

தஞ்சவூர் (09 மார்ச் 2020): தஞ்சாவூர் அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெரு வில் 600 ஆண்டு பழமையான ஆதீஸ்வரர் என்கிற ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 19 ஆம் தேதி பின்புறக் கதவு உடைக்கப்பட்டு ஒன்றரை யடி உயர ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வ ரர் சிலை உள்ளிட்ட சிலைகள் திருடு போயின.

இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர், கோயில் சி.சி.டி.வி., கேமரா வில் பதிவான காட்சிகளை வைத்து, தஞ்சை சுங்கான் திடலை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவரை பிடித்து விசா ரித்தனர். இதில் அவர் கொடுத்த தகவ லின் பேரில், கரந்தையை சேர்ந்த சண்முக ராஜன் (45), சுங்கான் திடலை சேர்ந்த ரவி (45), நாகப்பட்டினம் மாவட்டம் கீவலுாரை சேர்ந்த விஜயகோபால் (37), ஆகிய மூவரை கைது செய்தனர்.

திருடிய சிலைகள் கோடிக்கணக்கில் விலை போகும் என்பதால், விற்பனை செய்வதற்காக ராஜேஷ் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து அங்கிருந்த 22 சிலைகளையும் காவல் துறையினர் மீட்டனர். திருடு போன 48 நாட் களில் சிலையை மீட்ட காவல்துறையின ருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply