திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

Share this News:

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு, பிரசாந்த் மீது கோபம் ஏற்பட்டது. இது பெரிதாகி ‘ஐபேக்’ நிர்வாகிகளுக்கும், ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதலாக வெடித்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் எந்த நேரமும் இளைஞர்கள் பட்டாளத்துடன் இயங்கி வந்த ஐபேக் அலுவலகம் திடீரென மூடப்பட்டுள்ளது. ஐபேக் தரப்பில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தான் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.


Share this News: