தமிழகத்தில் இன்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு!

Share this News:

சென்னை (14 ஆக 2021): தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply