ஓபிஎஸ்-இபிஎஸ் என்னை கட்டுப்படுத்த முடியாது – ஓபிஎஸ் தம்பி பரபரப்பு பேட்டி!

Share this News:

தேனி (05 மார்ச் 2022): ”அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமைதான் தேவைப்படுகிறது. என் விருப்பப்படியே சசிகலாவைச் சந்தித்தேன்” என்று  ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா பயணம் மேற்கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து  திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். இதனால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓ.ராஜாவோடு சசிகலாவைச் சந்திக்கச் சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி ஆகிய மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.ராஜா, ”அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமைதான் தேவைப்படுகிறது. என் விருப்பப்படியே சசிகலாவைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தான் காரணம். நான் யாரைச் சந்தித்தேன்? நான் என்ன எதிர்க்கட்சித் தலைவரையா சந்தித்தேன்? இவர்கள் யார் என்னை நீக்குவதற்கு? அம்மா (ஜெயலலிதா), எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். கால் மணி நேரம் பழைய விசயங்கள் பற்றியெல்லாம் பேசினோம். அவர்களும் சந்தோசம் என்றார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம்” என்றார்.


Share this News:

Leave a Reply