ஸ்டாலினுக்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (02 மார்ச் 2020): ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்காததால் திமுக தலைவர் ஸ்டாலின் மீது முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.யாக திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த முறையே ராஜ்யசபா எம்.பி.யாவார் என எதிர்பார்க்கப்பட்ட என்.ஆர். இளங்கோவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சரான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபா வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அந்தியூர் செல்வராஜை ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதை அக்கட்சி தொண்டர்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

இது இப்படியிருக்க ஏற்கனவே முஸ்லிம்களை ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்க ஒருவரை கூட ஸ்டாலின் நியமிக்காதது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்யசபா பதவிக்கு ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு மட்டும் ஒரு வேட்பாளர் அறிவித்த நிலையில் மற்ற கூட்டணி கடசிகளான மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன. எனினும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாலினின் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவில் உள்ள தீவிர தொண்டர்களான முஸ்லிம்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்டாலின் முஸ்லிம் வேட்பாளரையும் இணைக்கும் வகையில் வேட்பாளர் பெயரை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply