இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

Share this News:

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள்.

புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்.

இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும் புதுச்சேரி அரசு வழங்கியது. இதனை அடுத்து 82 வயது முதியவர் உட்பட கொரோனா பாதித்து இறந்த நான்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை இந்து முறைப்படி பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அடக்கம் செய்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தியும் கொண்டனர்.

மேலும் இவர்கள் வழக்கமான மருத்துவ சேவைக்காக வைத்திருக்கும் ஆம்புலன்ஸையும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு வாகனத்தை கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.


Share this News: