லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்தையில் முடிவு!

Share this News:

துபாய் (28 மார்ச் 2022): கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துபாயில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி இதனைத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் லுலு குழும தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மேற்கண்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை அபுதாபியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது குழுமம் விரைவில் மால்கள் கட்டும் பணியை தொடங்கும் என்றும், இரண்டு வணிக வளாகங்களிலும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் தெரிவிக்கையில் , தான் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து, 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 8 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும் 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. என்றார்

மேலும் முதலீட்டாளர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், விருந்தோம்பல், உணவு பூங்காக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிரமாண்டமான பர்னிச்சர் பார்க்கில் முதலீடு செய்யுமாறும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.


Share this News:

Leave a Reply